சினிமா நடிகர் உள்பட 2 பேருக்கு ஆயுள்தண்டனை
சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்த வழக்கில் சினிமா நடிகர் உள்பட 2 பேருக்கு மதுரை கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்த வழக்கில் சினிமா நடிகர் உள்பட 2 பேருக்கு மதுரை கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பாலியல் கொடுமை
மதுரையை அடுத்த சோழவந்தான் முள்ளிப்பள்ளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பக்தன் என்கிற நாச்சியப்பன் (வயது 49). இவர் எலி உள்ளிட்ட சினிமா படங்களிலும், டி.வி. தொடர்களிலும் துணை நடிகராக நடித்துள்ளார்.
இவர் ஒரு சிறுமியை ஏமாற்றி மிட்டாய் மற்றும் பலகாரம் வாங்கிக் கொடுத்து கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை பார்த்த தென்கரையை சேர்ந்த டிரைசைக்கிள் தொழிலாளி மணிகண்டனாலும் (28) சிறுமிக்கு பாலியல் கொடுமை நேர்ந்துள்ளது.
இது குறித்த புகாரின்பேரில் சோழவந்தான் போலீசார் வழக்குபதிவு செய்து பக்தன் என்கிற நாச்சியப்பன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டளை
இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஜான்சி ஆஜரானார்.
விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்ட நாச்சியப்பன், மணிகண்டன் ஆகியோருக்கு தலா ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார்.