உயிர்காக்கும் மருத்துவ வசதி
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது.
சாத்தூர்,
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மருத்துவ மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து இருக்கன்குடி கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாதரெட்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் எளிதாக வந்து தரிசனம் செய்வதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு்ள்ளது. ேமலும் கோவிலில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, வட்டாட்சியர் வெங்கடேஷ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் மாரிச்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன், சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி, உதவி ஆணையர் கருணாகரன், கோவில் பரம்பரை அறங்காவலர்குழு தலைவர் ராமமூர்த்தி, அறங்காவலர் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மையத்தில் முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன.