மீனவ இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு பயிற்சி திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
மீனவ இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை,
தமிழக மீனவர்கள் பங்களிப்பின் மூலம் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உயிர் காக்கும் நீச்சல் வீரர்களுக்கான பயிற்சி மீனவ இளைஞர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, 1,000 மீனவ இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு, மீட்பு பயிற்சி திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் 25 பேருக்கான பயிற்சியை முதல்-அமைச்சர் துவக்கி வைக்கிறார். கடலில் மூழ்கி தவிப்பவர்களை பாதுகாப்பதற்கு 14 கடலோர மாவட்டங்களில் 1,000 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.