தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஆலம்பாடி அருகே நெய்க்காரன்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 39). தொழிலாளி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த வெள்ளையம்மாள் (52) என்பவருக்கும் வீட்டில் இருந்து கழிவுநீரை வெளியேற்றுவதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 15-2-2021 அன்று வீட்டில் இருந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த சந்திரன், வெள்ளையம்மாளை சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வெள்ளையம்மாள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்தார். இதுகுறித்து காங்கயம் போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்துசந்திரனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கொலைமுயற்சி குற்றத்துக்காக சந்திரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2,500 அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.