எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மயிலாடுதுறை கிளை தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முகவர்களின் பாலிசி கமிஷனை குறைக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த முகவர்களுக்கு போனஸ் கமிஷனை மாத மாதம் வழங்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். பெண் முகவர்களுக்கு தனி முகவர் அறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்.