தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-08-31 18:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் சீதா பால் கிராமத்தை சேர்ந்த வடிவேல் ராஜா (வயது 52) மற்றும் ஜெரால்ட் பீட்டர் (50) உள்பட சிலர் கடந்த 2013-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் டி.விளாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற கால்வாய் அமைக்கும் பணிக்காக வந்திருந்தனர். அவர்கள் அங்கிருந்த நாடக மேடையில் தங்கி இருந்தனர். இந்நிலையில் 26.9.2013 அன்று இரவு வடிவேல் ராஜாவிற்கும் உடனிருந்த ஜெரால்டு பீட்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வடிவேல் ராஜா கீழே கிடந்த கல்லை எடுத்து ஜெரால்டு பீட்டர் தலையில் போட்டதில் அவர் இறந்தார். இது தொடர்பாக திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேல் ராஜாவை கைது செய்து அவர் மீது சிவகங்கை உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அழகர்சாமி ஆஜரானார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, வடிவேல் ராஜாவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்