கணவரை எரித்துக்கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை

வள்ளியூர் அருகே கணவரை எரித்துககொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2022-10-27 20:53 GMT

வள்ளியூர் அருகே கணவரை எரித்துககொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

வீட்டை எழுதி வைக்க...

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கள்ளிகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 70). இவருடைய மனைவி மரியலீலா (67).

கடந்த 2019-ம் ஆண்டு பாக்கியராஜின் பெயரில் உள்ள வீட்டையும், சுற்றியுள்ள இடத்தையும் மரியலீலா தனக்கு எழுதி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பாக்கியராஜ் மறுத்துவிட்டார்.

எரித்துக் கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் பாக்கியராஜ் தூங்கிக் கொண்டு இருந்தபோது அவர் மீது மரியலீலா மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரியலீலாவை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி குமரகுரு, குற்றம் சாட்டப்பட்ட மரியலீலாவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் கே.சுப்பிரமணியன் ஆஜரானார்.

மேலும், இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்