மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு

மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2023-06-30 20:45 GMT

லாரி டிரைவர்

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகாவை சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் லாரியில் டிரைவராக பணியாற்றினார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு 6 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுதொடர்பாக சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் லாரி டிரைவரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் போலீசார் சார்பில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்