எல்.ஐ.சி. முகவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் எல்.ஐ.சி. முகவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
அகில இந்திய எல்.ஐ.சி. முகவர் சங்கம் திருவண்ணாமலை கிளை சார்பில் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் நடேசன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், எல்.ஐ.சி. பாலிசி பத்திரங்களை தமிழில் வழங்கிட வேண்டும். இந்தியில் அச்சிட்டு இருப்பதை ரத்து செய்ய வேண்டும். புதிய பீமா ரத்னா பாலிசியை முகவர்களுக்கு விற்பனை உரிமையை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
இதில் நிர்வாகிகள் குமரவேல், சக்திவேல், கோவிந்ராஜு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.