தக்கலையில் எல்.ஐ.சி. முகவர்கள் போராட்டம்
தக்கலையில் எல்.ஐ.சி. முகவர்கள் போராட்டம் நடத்தினர்.
தக்கலை,
தக்கலையில் எல்.ஐ.சி. முகவர்கள் போராட்டம் நடத்தினர்.
தர்ணா போராட்டம்
தக்கலை எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்த வேண்டும், பிரிமிய தொகையில் ஜி.எஸ்.டி.பிடிப்பதை ரத்து செய்ய வேண்டும், பாலிசிதாரர்கள் பெறும் கடன்தொகைக்காக வட்டியை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலை எல்.ஐ.சி.அலுவலகம் முன்பு முகவர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு முகவர் சங்க தக்கலை கிளை தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். செயலாளர் சிபு முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான முகவர்கள் கலந்து கொண்டனர்.