எல்.ஐ.சி. முகவர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சியில் எல்.ஐ.சி. முகவர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.

Update: 2022-09-30 18:45 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு அகில இந்திய முகவர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட தலைவர் சக்தி தலைமை தாங்கினார். துணை தலைவர் திருமூர்த்தி, கிளை தலைவர் காசிலிங்கம், செயலாளர் சிலம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பாலிசிதாரர்களின் போனசை உயர்த்த வேண்டும், பாலிசிதாரர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், 5 வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதி வழங்க வேண்டும், முகவர்களின் பணிக்கொடையை ரூ.20 லட்சம் ஆக உயர்த்த வேண்டும், மருத்துவ குழு காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்க வேண்டும், குழு காப்பீடு வயது வரம்பு மற்றும் தொகையை உயர்த்த வேண்டும், வீட்டு வசதி கடன் 5 சதவீத வட்டியில் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பொருளாளர் செந்தில்குமார், முகவர்கள் கிருஷ்ணன், துரைசாமி நடராஜன், துரைமுருகன், சின்னதுரை, ஆறுமுகம், சுரேஷ் அந்தோணிசாமி, செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்