வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் நூலகத்தில் நூலக வார விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவி லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லைலா பானு மற்றும் வார்டு உறுப்பினர்கள் சக்தி பிரேமா, ராமலட்சுமி, வாசகர் வட்ட தலைவர் புலவர் கணேஷ், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத் தலைவர் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளி மாணவிகளின் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மகாத்மா காந்தி சேவா சங்கத் தலைவர் கு.தவமணி, நூலக வாசகர் வட்ட தலைவர் கணேசன், திருவள்ளூர் மன்ற தலைவர் மாரியப்பன் கொண்டனர்.