நூலக வார நிறைவுநாள் விழா

செங்கோட்டையில் நூலக வார நிறைவுநாள் விழா நடந்தது

Update: 2022-11-20 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நூலகத்தில், நூலக வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக கவிதை போட்டி நடைபெற்றது. இதில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் 78 பேர் கலந்து கொண்டார்கள். இதையொட்டி நடந்த விழாவுக்கு வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் செண்பக குற்றாலம் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக செங்கோட்டை நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

நூலக வளர்ச்சிக்கு உதவிய ஜே.பி. கல்வியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் ஜான் கென்னடி, டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி நூலகர் ஏஞ்சலின், அரசமரம் பார்வை குறைபாடு கற்றோர் அமைப்பின் நிறுவனர் மன்சூர் அலி ஆகியோருக்கு சேவை விருது வழங்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற 22 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ஜவஹர்லால் நேரு வாழ்த்தி பேசினார்.

முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்