நூலக உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருக்காட்டுப்பள்ளி அரசு கல்லூரியில் நூலக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூரில் செயல்பட்டு வரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நூலக உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பூதலூர் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராஜா வரதராஜா வரவேற்றார்.தஞ்சை மாவட்ட நூலக அலுவலர் முத்து, கலை கல்லூரி பேராசிரியர்கள் சுதாகர் வடிவேல், இனியவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பேராசிரியர்கள் என 225 பேரும் திருக்காட்டுப்பள்ளி கிளை நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து அதற்கு உரிய தொகையை கிளைநூலகர் (பொறுப்பு) சோம்நாத்திடம் வழங்கினார்கள். முடிவில் பேராசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.