விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-06-30 19:48 GMT

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கியதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வநம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில துணைச் செயலாளர்கள் அன்பானந்தம், இளங்கோமணி, அரியலூர் தொகுதி செயலாளர் மருதவாணன், மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பாலு ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாகவும், அதனை போலீசார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தா.பழூரில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும், அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், பொது கழிவறை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாவட்ட மகளிர் அணி தலைவர் மணிமாலா பாலு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்