விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தோழமை கட்சிகளை சேர்ந்தவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் பா.ஜ.க.வின் பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமியை கண்டித்தும் மற்றும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆகியவற்றை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.