விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சங்கராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம்
சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய, நகரம் சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.தொகுதி செயலாளர்கள் அம்பிகாபதி சிலம்பன், ஒன்றிய செயலாளர்கள் தலிச்சந்திரன், சிந்தனைவளவன், வேலு, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வக்கீல் அணி மாநில செயலாளர் பார்வேந்தன், மாநில துணை பொது செயலாளர் திருமார்பன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மூங்கில்துறைப்பட்டு காலனி பகுதியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடி வன்முறையில் ஈடுபட்ட கும்பலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், சேதப்படுத்திய சொத்துக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ஆதிதிராவிடர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாலு, பொன்னிவளவன், அறிவுக்கரசு, திராவிட சந்திரன், தொல்காப்பியன், கிள்ளிவளவன், குமார், வெங்கடேசன், கண்ணன், சக்திவேல், ராதிகா, பழனியம்மாள், காந்தி மற்றும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் பகுதியை சோ்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.