விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-01-10 18:45 GMT

தமிழக சட்டசபையில் அரசு சார்பில் கூறப்பட்டிருந்த திராவிட மாடல் ஆட்சி மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பெயர் உள்ளிட்டவற்றை வாசிக்காமல் கவர்னர் ரவி தனது உரையை முடித்துள்ளார். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து சட்டசபையில் கண்டன தீர்மானம் நிறைேவற்றப்பட்டது. தமிழக கவர்ரை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக கவர்னர் ரவியை கண்டித்து திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமை தாங்கினார். இதில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகி இளந்தென்றல், மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்செல்வன், மாநில துணை செயலாளர் அந்தோணிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்