விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-26 18:37 GMT

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வடக்கு மாதவி கிராமத்தில் கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்