விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-09-04 18:45 GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ரபீக், மேற்கு மாவட்ட செயலாளர் மதன் ஆகியோர் தலைமை தாங்கினர். திண்டுக்கல் மண்டல செயலாளர் தமிழ்வாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை அரசு ஒதுக்கீடு செய்தும் 2 ஆண்டுகளாக வழங்காமல் இருப்பதை கண்டித்தும், கல்வி உதவித்தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்