விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-22 19:19 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரத்தில் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் தலிச்சந்திரன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் சிந்தனைவளவன், ஒன்றிய பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் சிலம்பன், வணிகரணி மாநில செயலாளர் திராவிட சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை விசாரணையின்றி தூக்கிலிடகோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சக்திவேல், காந்தி, சத்யராஜ், ராமச்சந்திரன், கண்ணன், கார்த்தி, பாஸ்கர், கோவிந்தராஜ், முனியன், ஏழுமலை, தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்