விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மானாமதுரை
மானாமதுரை ரெயில்வேயில் நிலைய மேலாளர் அலுவலகத்தில் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதனை நிலைய மேலாளர் எடுத்ததாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிலைய மேலாளரிடம் அம்பேத்கர் படத்தை அலுவலகத்திற்குள் வைக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அதன் பின்னர் அலுவலகத்தில் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இ்ந்த நிலையில் நேற்று மானாமதுரை ரெயில் நிலையம் முன்பு நிலைய மேலாளரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார்.
இதில், காங்கிரஸ் நகர் தலைவர் கணேசன், ம.தி.மு.க. நகர செயலாளர் அசோக், ஒன்றிய செயலாளர் கண்ணன், மருது, இந்திய கம்யூனிஸ்டு நாகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முத்துராசு, கண்ணன், முத்துப்பாண்டி, மாரிமுத்து, சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜீவன்ராஜ் நன்றி கூறினார்.