விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தோகைமலை மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் பாலகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் லெட்சுமணன் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் வருகின்ற 8-ந்தேதி தோகைமலையில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடத்துவது, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை, தோகைமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 ஊராட்சிகளுக்கும் தலா ஒரு பொறுப்பாளரை நியமனம் செய்து கட்சியின் அனைத்து நிலை பணிகளையும் திறம்பட செய்து வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்,
வருகிற 5-ந்தேதிக்குள் தோகைமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் கட்சியின் சார்பாக வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய பொருளாளர் மகாதேவன், ஒன்றிய துணை செயலாளர் மலைவேல், ஒன்றிய துணை அமைப்பாளர் சரத்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.