மணிப்பூர் கலவரத்துக்காக பிரதமர் பதவி விலக விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

மணிப்பூர் கலவரத்துக்காக பிரதமர் பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது.

Update: 2023-07-26 19:20 GMT

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் புகைப்படத்தை அகற்ற உத்தரவிட்ட மேற்படி சுற்றறிக்கை தற்சமயம் நிறுத்தி வைத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் மேற்படி சுற்றறிக்கையை நிரந்தரமாக ரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படம் வைப்பதற்கு புதிய சுற்றறிக்கை வெளியிட்டு ஆணை பிறப்பிக்க வேண்டும். மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தால் மக்களுக்கு பாதுகாப்பற்ற அசாதாரண சூழ்நிலையை உருவாக்கிய மணிப்பூர் மாநில முதல்வரும், இந்திய பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்