விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-30 19:00 GMT

திருச்சியில் வருகிற அக்டோபர் மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன் தலைமையில் நடைற உள்ள மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள மவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. நகர, ஒன்றிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் சீ.ம.ரமேஷ்கர்ணா தலைமை தாங்கி பேசினார். அப்போது தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பொதுமக்களும் பங்கேற்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மாநாடு குறித்த சுவர் விளம்பரம் செய்தல், மாநாட்டிற்கு செல்ல 100 வாகனங்களை ஏற்பாடு செய்வது, மாவட்டம் முழுவதும் கல்வெட்டுகள், கொடி கம்பங்கள் அமைப்பது, தேர்தல் பூத் ஏஜெண்டுகள், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் இருமுகவர்களை நியமிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மண்டல துணைசெயலாளர் தமிழ், முன்னாள் மண்டல செயலாளர் ரத்தினநற்குமரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார், துரைநன்மாறன், ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் மாந்தாங்கல் ராஜா, துணை செயலாளர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் நகரசெயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்