விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நேற்று திருச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக சென்று அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். ஊர்வலத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் அருள் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன், வடக்கு மாவட்ட செயலாளர் நீலவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக மாநில அமைப்புச் செயலாளர் இளமாறன் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் ஜங்ஷன் வழியாக அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலையை வந்தடைந்தது. பின்னர் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஊர்வலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.