விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் முயற்சி
திருமருகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி:
திருமருகல் பஸ் நிலையம் எதிரே, சேஷமுலை ஊராட்சி பகுதியில் வசிக்கும் தகுதியான நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அரசு மறுப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை தொகுதி செயலாளர் அறிவழகன், ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த்வழவன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில ஈடுபட முயற்சி செய்தனர்.இது குறித்து தகவல் அறிந்த நாகை தாசில்தார் ராஜசேகர், திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தரவளவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், அனைவருக்கும் வீட்டுமனைப்பட்டா கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்படும் என அதிகாரிகள் கூறினர். இதில் உடனபாடு ஏற்பட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.