விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-22 18:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சி பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய நபரை தட்டிக்கேட்டதற்காக சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி போராட்டம் நடத்துவதற்காக மாவட்ட செயலாளர் பாவாணன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே சிறைச்சாலை பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே உள்ள பஸ் நிறுத்த பகுதியில் திரண்டனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையிலும் நிர்வாகிகளும், பிற அமைப்பினரும் திரண்டு வந்தனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரினர். இதனால் போராட்டம் நீடித்தது. மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா, டவுன் இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் சிறிது நேரம் பரபரப்பானது.

Tags:    

மேலும் செய்திகள்