லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு

மருங்கூர் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு

Update: 2023-06-29 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் மருங்கூரில் அமைந்துள்ள லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி மாலை தேவதானுக்ஞை, தனபூஜை, ஆச்சாரய வர்ணமும், 26-ந் தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோ-பூஜை, தீர்த்த சங்க்ரஹணம், அக்னி சங்க்ரஹணம், அஸ்வ பூஜையும், மாலை வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், கடஸ்தாபனமும், முதல்கால யாக சாலை பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 27-ந் தேதி 2-ம் கால யாகசாலை, மூன்றாம் கால யாக சாலை பூஜையும், நேற்று முன்தினம் 4-ம் கால யாக சாலை பூஜை மற்றும் 5-ம் கால யாக சாலை பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை 6-ம் கால யாக சாலை பூஜை, ஜபம், ஹோமம், நாடி சந்தானம் போன்றவை நடைபெற்று மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் கடங்கள் கோவிலை சுற்றி வந்தது, விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு சவுந்தரநாயகி சமேத சுந்தரேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்