"எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பாக்கலாம்" - கோவையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்..!

தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா நேற்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-18 04:21 GMT

கோவை,

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா நேற்று தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் கொண்டாடினர். பெரியாரின் பிறந்தநாள் விழாவையொட்டி சமூக நீதி நாளாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கோவையில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்களுடன் "எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பார்க்கலாம்" என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

கோவை பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த சுவரிட்டி பார்க்க முடிந்தது. அந்த சுவரொட்டியில், அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இந்த போஸ்டர் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்