அனைத்து தரப்பினருக்குமான வளர்ச்சி நிறைந்த இந்தியா வழிவகுக்க உறுதியேற்போம்: மு.க. ஸ்டாலின் டுவிட்
நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியேற்றினார்.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருப்பதாவது:
மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலையுயர்வு என ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும் - வேற்றுமைகளை மதிக்கும் பண்பும் - அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலைநாளில் உறுதியேற்போம்! என தெரிவித்து உள்ளார்.