தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

வாலாஜா அரசு மகளிர் கல்லூரி சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-02-09 17:13 GMT

மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ந் தேதி தொழுநோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தொடங்கி 2 வாரங்களுக்கு பொதுமக்களிடையே தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் தொழு நோயை வென்று சரித்திரமாக்குவோம் என்ற கருத்தை முன்வைத்து மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் கண்ணகி தலைமை தாங்கினார.் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மருத்துவ பணிகள் தொழுநோய் துணை இயக்குனர் பிரீத்தா திட்ட விளக்க உரையாற்றினார்.

ஊர்வலத்தை கல்லூரி முதல்வர் சீனிவாசன் குடியரசு தொடங்கி வைத்தார். கல்லூரியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் வாலாஜா அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதில் கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்