4 ஆடுகளை கடித்துக்கொன்ற சிறுத்தை

ஆனைமலை அருகே 4 ஆடுகளை சிறுத்தை கடித்துக்கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

Update: 2022-06-12 16:16 GMT

ஆனைமலை

ஆனைமலை அருகே 4 ஆடுகளை சிறுத்தை கடித்துக்கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

ஆடுகளை கடித்துக்கொன்றது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும் கால்நடை வளர்ப்பு தொழிலும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதூர் அழுக்கு சாமியார் கோவில் பகுதியில் விவசாயி மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு ஆடு, மாடுகளை கட்டி வைத்து, அவர் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் மகாலிங்கம் வழக்கம்போல் ஆடு, மாடுகளை தோப்பில் கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர்  திரும்பி வந்து பார்த்தபோது, 4 ஆடுகளை சிறுத்தை கடித்துக்கொன்று இருப்பது தெரியவந்தது.

கூண்டு வைத்து...

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மகாலிங்கம் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

பின்னர் அங்கு பதிவான கால் தடங்களை வைத்து, ஆடுகளை கடித்துக்கொன்றது சிறுத்தை என்பதை உறுதி செய்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர். ஏற்கனவே காளியாபுரத்தில் மாட்டை சிறுத்தை கடித்துக்கொன்றது. தற்போது மீண்டும் ஆடுகளை கடித்துக்கொன்றுள்ளதால், அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதற்கிடையில் பாதிக்கப் பட்ட மகா லிங்கத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு தொகையை வனத்துறையினர் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்