சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு

வேதாரண்யம் பகுதியில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-12-28 18:45 GMT

வேதாரண்யம்:

தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. சென்னை தலைமை செயலக செயலாளர் பாலசீனிவாசன் மற்றும் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து, ஆறுகாட்டுத்துறை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கோவில்பத்து கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கு சீரமைப்பு பணிகளையும், ஆறுக்காட்டுத்துறையில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ், வேளாண்மை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமுதுநிலை மண்டல மேலாளர் (பொறுப்பு). ராஜாராம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்செல்வகுமார். விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்