நீர்த்தேக்க அணையை சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு
நீர்த்தேக்க அணையை சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் சக்கரமல்லூர் ஊராட்சியில் புதுப்பாடி பாலாறு அணைக்கட்டு பகுதியை சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் பார்வையிட்டனர்.
சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் கோவி. செழியன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். அப்போது சட்டமன்ற பேரவை செயலாளர் கி. சீனிவாசன், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்களான செங்கம் தொகுதி மு.பெ.கிரி எம். எல். ஏ.பர்கூர் தொகுதி தே.மதியழகன் எம்.எல்.ஏ., விருகம்பாக்கம் தொகுதி ஏ.எம்.வி. பிரபாகர ராஜா எம்.எல்.ஏ வாணியம்பாடி தொகுதி செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆற்காடு தொகுதி ஜே.எல். ஈஸ்வரப்பன் எம் எல் ஏ மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன் ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.