உடுமலை
உடுமலை காந்திநகர் விரிவு குப்தா லே-அவுட் பகுதியில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தில் முதியவர்கள் தங்கியுள்ளனர்.அத்துடன் 10 சிறுவர்கள் அங்கு தங்கியிருந்து பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.இந்த நிலையில் உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் இந்த பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமிற்கு உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரான சப்-கோர்ட் நீதிபதி எம்.மணிகண்டன் தலைமைதாங்கிபேசினார்.ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் கே.விஜயகுமார், ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சேவாஸ்ரமத்தின் நிர்வாகிகள் ஆர்.வின்சென்ட்,வி.டெய்சி வின்சென்ட் ஆகியோர்வரவேற்றனர்.முகாமில் தங்கியுள்ள பள்ளி சிறுவர்களுக்கு உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நோட்டு புத்தகம், பேனா, பென்சில்,ஸ்கேல் ஆகியவை வழங்கப்பட்டன.முகாமில் வக்கீல்கள், முதியோர் மற்றும் பள்ளி சிறுவர்கள் கலந்து கொண்டனர்.