பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-08-25 13:16 GMT

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான எம்.பிரீத்தா தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேசுவரி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சுபாஷினி, குழந்தை நலக்குழு உறுப்பினர் சிதி ரம்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் இலவச சட்ட உதவி குறித்தும், அரசு நலத்திட்டங்களை இலவச சட்ட உதவி மையம் மூலம் எவ்வாறு பெறலாம், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், குழந்தை திருமணம்குறித்தும் விளக்கி கூறப்பட்டது. சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு இலவச சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முகாமில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், செயலாளர் ஜெயக்குமார், வார்டு உறுப்பினர்கள் பாரதிராஜா, ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை சேர்ந்த நம்பிராஜன், பால்செல்வம் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்