மகளிர் குழுவினருக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
சோமையம்பாளையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு சட்டவிழிப்புணர்வு முகாம் நடந்தது.
சோமையம்பாளையம்
கோவை அருகே சோமையம்பாளையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடந்தது. தன்னார்வலர் முரளி வரவேற்றார்.
இதில், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான கே.எஸ்.எஸ்.சிவா பேசினார்.
முகாமில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடு, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வழங்கப்படும் சட்ட உதவிகள், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் அச்சுறுத்தல்கள், போக்சோ குற்றங்கள், குடும்ப வன்முறைகள், அவற்றுக்கு எதிராக நிவாரணம் பெற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாமில் பெண்கள் தொடர்பான சட்டங்கள் குறித்த சந்தேகங் களை நீதிபதியிடம் கேட்டனர். அதற்கு நீதிபதி கே.எஸ்.எஸ்.சிவா விளக்கம் அளித்தார். இதில் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.