பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

குன்னூரில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2022-05-30 14:40 GMT

குன்னூர்,

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. அங்கு நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான முருகன் தலைமை தாங்கினார். முகாமில் குடும்ப வழக்குகள், சொத்து வழக்குகள், வரதட்சணை வழக்குகள், வங்கி சம்பந்தமான வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், பெண்களின் சொத்து வழக்குகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் சமரச மையம், மக்கள் நீதிமன்றத்தின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு துணடு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முகாமில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஸ்ரீதர், குன்னூர் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகரன், குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கலாம், உரிமையியல் நீதிபதி ராஜ் கணேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்