சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக, சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நரசிம்மமூர்த்தி, வக்கீல்கள் சங்கரநாராயணன், விஜயலட்சுமி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.