சட்ட விழிப்புணர்வு முகாம்

செங்கோட்டை கோர்ட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம்

Update: 2023-02-10 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை கோா்ட்டில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் செங்கோட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் காசோலை மற்றும் ஜீவனாம்சம் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக முடிப்பது குறித்து வழக்காடிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது. முகாமிற்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதித்துறை நடுவரும் நீதிமன்ற நீதிபதியுமான சுனில்ராஜா தலைமை தாங்கினார். வழக்கறிஞா்கள் சங்க நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, மூா்த்தி, சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் வரவேற்றார். முகாமில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத காசோலை மற்றும் ஜீவனாம்சம், பாகபிரிவினை வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக தீர்த்து வைப்பது குறித்து விளக்கவுரை அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்