சேரன்மாதேவி:
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நெல்லை வக்கீல்கள் சங்கம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து, சட்ட தினத்தை முன்னிட்டு சாந்திநகரில் சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தியது.
நெல்லை மாவட்ட நீதிமன்ற 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர் செல்வம் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் சுசிலா வரவேற்று பேசினார். மூத்த வக்கீல் ஜோதிமுருகன், வழக்கறிஞர் சங்க செயலாளர் காமராஜ், கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில், மாரியம்மாள் நன்றி கூறினார். 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அமைப்பு சாரா அடையாள அட்டை மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டது.