இளையான்குடி,
இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் குழுவின் தலைவரும் நீதிபதியுமான எம்.ஹரி ராமகிருஷ்ணன் உத்தரவுப்படி குண்டுகுளம் ஆர்.சி.உயர்நிலைப்பள்ளியில் சட்ட தின விழாவை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் டேனியல் குமார் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் ஜான்சன் வரவேற்றார். வக்கீல் சுகன்யா, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார். வக்கீல் ஜான் சேவியர் பிரிட்டோ புகையிலை மற்றும் மதுவால் ஏற்படும் சீர்கேடுகளால் மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து விளக்கமளித்தார். இதில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வட்ட சட்ட பணி குழுவின் இளவரசன் செய்திருந்தார்.