சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-07-12 18:45 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்ட சட்டப்பணி குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்ட சட்டப்பணி குழுவின் தலைவர் சார்பு நீதிபதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்தன வேலு, மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை முதுகுளத்தூர் வட்ட சட்டப்பணி குழுவின் சட்ட தன்னார்வலர் அடைக்கலமேரி செய்து இருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்