சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்
சிறுமலை பழையூரில் சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சிறுமலை பழையூரில் சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமை தாங்கி பேசினார். முகாமில் பெண்களுக்கான சிறப்பு சட்டங்கள், வன சட்டம், குழந்தைகளுக்கான சட்டம், போக்சோ சட்டம், மோட்டார் வாகன சட்டம், குடும்ப வன்முறை சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதி முத்துசாரதா உத்தரவிட்டார். இந்த முகாமில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், நீதிபதி சரண், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகனா மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் கலந்துகொண்டனர்.