ஐகோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநில சம்பவத்தை கண்டித்து ஐகோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை,
மணிப்பூர் மாநில கலவர சம்பவங்களை கண்டித்து மதுரை ஐகோர்ட்டு முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்கங்கள் (எம்.பி.எச்.ஏ.ஏ. மற்றும் பெண்கள் வக்கீல் சங்கம்) இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்தவள்ளி பேசுகையில், மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமை சம்பவங்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என்றார்.பின்னர் வக்கீல்கள் ஷாஜி செல்லன், வாஞ்சிநாதன் உள்ளிட்ட பல்வேறு வக்கீல்கள் கண்டன உரை ஆற்றினார்கள். அப்போது மணிப்பூர் கலவரத்துக்கு பா.ஜ.க. அரசை குற்றம் சாட்டி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ஆண்டிராஜ், அன்பரசு, வினோத் மற்றும் வக்கீல்கள் பழனியாண்டி, பினேகாஸ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.