வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-29 18:45 GMT

காரைக்குடி, 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடைமுறையில் உள்ள சட்டங்களை மாற்றி அமைக்கும் மத்திய அரசை கண்டித்து காரைக்குடி கோர்ட்டு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரைக்குடி வக்கீல்கள் சங்க தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் குமரகுரு உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்