வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டை;
இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகிய சட்டங்களை திருத்தம் செய்வதையும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தலைப்புகளை இந்தி மொழியில் மாற்றம் செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து பட்டுக்கோட்டை வக்கீல்கள் நேற்று காலை 11 மணியளவில் பட்டுக்கோட்டை கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் ஆ.மாஸ்கோ தலைமை தாங்கினாா். வக்கீல்கள் சங்க செயலாளர் சி.ராஜேந்திரன், பொருளாளர் அ.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் சங்க துணைத் தலைவர் சிவா, துணை செயலாளர் சுமதி, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்துகொண்டனர். மேலும் பட்டுக்கோட்டையில் வக்கீல்கள் மத்திய அரசை கண்டித்து கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.