தேனி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தேனி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-08-23 21:00 GMT

தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் தீர்மானத்தின்படி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு தேனி வக்கீல் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய அளவில் இருந்து வரும் முப்பெரும் சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்துள்ளதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள், வக்கீல்கள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது முப்பெரும் சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்ததை கண்டித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்