குற்றவியல் நடைமுறை சட்டத்தை மாற்றி அமைத்த மத்திய அரசை கண்டித்தும், அந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், நாகையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில், வக்கீல் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுவாதி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு புதிய 3 குற்றவியல் நடைமுறை சட்டத்தை மாற்றி அமைத்தது தவறு என வலியுறுத்தியும், அதனை திரும்ப பெற வேண்டியும் கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில அரசு வக்கீல் செல்வராஜ், வேதை ராமச்சந்திரன், ஜாக் மாநில துணைத்தலைவர் இளங்கோ, தங்க.கதிரவன் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.